பொறளை கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டு மீட்பு

பொறளை பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் வளாகத்தில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில், சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட மூவரில் ஒருவர் பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னால் உள்ள ‘ஓல் செயின்ட்ஸ் சர்ச்சின்’ வளாகத்திலிருந்து நேற்று மாலை குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபராக அடையாம் காணப்பட்டுள்ள நபர், தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

காவல்துறையினர் அவரிடம் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Comments are closed.