போதைப்பொருட்களுடன் 12 பேர் கைது

பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசார நிகழ்வொன்றை சுற்றிவளைத்த வெலிகம காவல்துறையினர் போதைப்பொருளுடன் 12 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

நேற்று (21) இரவு வெலிகம காவல்துறையினரால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மிதிகமவில் உள்ள உல்லாச விடுதியில் நடைபெற்ற இந்த விருந்துபசாரத்தில், குறித்த சந்தேகநபர்கள் கொகேய்ன், ஐஸ் மற்றும் கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை வைத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 30 மற்றும் 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் நேற்றைய தினம் மாத்தறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் மேலதிக விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.