போதைப்பொருள் தொடர்பில் 15 ஆவது சந்தேக நபர் விளக்கமறியலில்!

பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவின் பொறுப்பில் இருந்த ஹெரோய்ன் போதைப்பொருளை மீண்டும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு பெற்றுக்கொடுத்த சம்பவம் தொடர்பில் 15 ஆவது சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரம், இந்த சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளான 13 சந்தேக நபர்களின் விளக்கமறியலும் அன்றைய தினம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.