போதைப்பொருள் பாவிப்பவர்களுக்கு ரத்தாகும் அனுமதிப் பத்திரம்

ஒரு வருடத்திற்குள் போதைப்பொருளை பயன்படுத்தியவர்களுக்கு கனரக வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்பட மாட்டாது என வாகன ஒழுங்குபடுத்தல், பஸ் போக்குவரத்து சேவைகள், ரயில் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கனரக வாகன அனுமதிப் பத்திரத்திற்காக விண்ணப்பிப்பவர்கள் ஜனவரி 1 ஆம் திகதி முதல் இது சம்பந்தமான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தனியார் பஸ் மற்றும் கனரக வாகன சாரதிகள் போதைப்பொருள் போதையுடன் வாகனம் செலுத்துகின்றார்கள் என்று கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமையவே இந்த புதிய முறை செயற்படுத்தப்படுவதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.