போலி சாரதி அனுமதிப்பத்திரம் , மூவர் கைது

இரத்தினபுரி – வேவெல்வத்த, படேபொல பகுதியில் போலி சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போலி ஆவணங்கள் தயாரிக்க உதவிய நபர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேப்பகுதியில் வசிக்கும் 34, 42 மற்றும் 44 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக இரத்தினபுரி சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Comments are closed.