போலி நாணயத்தாள்களுடன் பெண் கைது

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட சுதந்திரபுரம், கொலனி பகுதியில், போலி நாணய தாள்களை வைத்திருந்த 41 வயதான பெண் ஒருவர், இன்று  (05) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

கைதுசெய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து, 500 ரூபாய் போலி நாணயத் தாள்கள் 17 மீட்கப்பட்டுள்ளன என, புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.