போலீஸ் அணி 3-வது வெற்றி

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் ஆச்சி மற்றும் ரோமா குழுமம் ஆதரவுடன் ‘ஏ’ டிவிசன் லீக் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இதில் 6-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் செயின்ட் ஜோசப்ஸ் அணி 25-23, 25-20, 31-29 என்ற நேர்செட்டில் லயோலாவை தோற்கடித்து முதல் வெற்றியை பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் அணி 29-27, 26-28, 25-20, 25-20 என்ற செட் கணக்கில் இந்தியன் வங்கியை வீழ்த்தியது. 4-வது ஆட்டத்தில் ஆடிய போலீஸ் அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும்.

Comments are closed.