மகாவலி ஆற்றில் காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம் மீட்பு!

மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற நிலையில், காணாமல் போன பாடசாலை மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவர் நண்பர்களுடன் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற நிலையில் நேற்று நண்பகல் காணாமல் போயிருந்தார்.

தெல்தெனிய பகுதியை சேர்ந்த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவன் ஒருவனே இவ்வாறு காணாமல் போயிருந்தார்.

இந்த நிலையில், குறித்த மாணவனின் சடலம் மகாவலி ஆற்றில் இன்று பிற்பகல் வேளையில் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், குறித்த மாணவனின் சடலம், பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.