மகிழுந்தை தாக்கிய காட்டு யானை

ஹபரணை வனப்பகுதியில், காட்டு யானை ஒன்றை படம் எடுக்க முயற்சித்த யுக்ரேன் நாட்டு தம்பதியினர் பயணித்த மகிழுந்தை, குறித்த காட்டு யானை தாக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.

பொலனறுவையிலிருந்து ஹபரணை நோக்கிப் பயணித்தபோது, குறித்த வெளிநாட்டு தம்பதிகள், காட்டு யானையை படமெடுக்க முயற்சிததுள்ளனர்.

இதன்போது அந்தக் காட்டு யானை நடத்திய தாக்குதலில், அவர்கள் பயணித்த மகிழுந்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.