மக்களை அச்சுறுத்தி கொள்ளையிட்ட குழுவின் 3 உறுப்பினர்கள் கைது

எம்பிலிப்பிட்டி – கொலன்ன பகுதியில் உள்ள கிராம மக்களை அச்சுறுத்தி, கொள்ளைச் சம்பவம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த குழுவின் 3 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

கொலன்ன, வவில்பென, கும்புருகமுவ, கொடகும்புர உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களை அச்சுறுத்தி கொள்ளையிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

சந்தேகநபர்கள், வீடுகளுக்குள் புகுந்து அங்குள்ளவர்களை அச்சுறுத்தி பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுள்ளதுடன், பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Comments are closed.