மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக அத்துரலியே ரத்ன தேரர் இன்று நாடாளுமன்றில் பதவியேற்பு!

எங்கள் மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக அத்துரலியே ரத்ன தேரர் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் பதவியேற்கவுள்ளார்.

நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது

எங்கள் மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அத்துரலியே ரத்ன தேரர், வர்த்தமானியில் பெயரிடப்பட்டிருந்த நிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2004 ஆம் ஆண்டு ஜாதிக ஹெல உறுமய சார்பிலும், 2010 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பிலும், 2015 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் சார்பிலும், அத்துரலியே ரத்ன தேரர், நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.