மசாஜ் நிலையங்களுக்கு புதிய விதிகள்

ஆயுள்வேத மசாஜ் நிலையங்களை ஒழுங்குபடுத்த விரைவில் புதிய விதிகள் கொண்டு வரப்படும் என ஆயுர்வேத ஆணையத்தின் வைத்தியர் எம்.டி.ஜே அபேகுணவர்தன தெரிவித்தார்.

சர்வதேச சுதேச மருத்துவம் தொடர்பான ஜனாதிபதி ஊடக மத்திய நிலையம் இன்று காலை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அதோடு தற்போது மசாஜ் நிலையங்களை ஒழுங்குபடுத்துவதற்கு குறிப்பிட்ட நிறுவனம் எதுவும் இல்லை என கூறிய அவர், இதை ஒழுங்குபடுத்துவதற்கு விரைவில் புதிய விதிகள் கொண்டு வரப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Comments are closed.