மட்டக்களப்பில் கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்துவரும் இடியுடன் கூடிய கடும் மழை காரணமாக தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நொச்சிமுனை, நாவற்குடா, வேலூர், கூழாவடி, மாமாங்கம், குமாரபுரம், புன்னைச்சோலை, இருதயபுரம், கறுவப்பங்கேணி, பாரதி வீதி, எல்லை வீதி உட்பட பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

இதனால் பலர், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதை காணமுடிகின்றது.

இதேநேரம் படுவான்கரையின் பல பகுதிகளில் வெள்ள அபாயம் காணப்படுவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போரதீவுப்பற்று, பட்டிப்பளை, வவுணதீவு, ஏறாவூர்ப்பற்று, கிரான் பிரதேச செயலகப்பரிவுகளிளும் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளது.

Comments are closed.