மணிப்பூரில் லேசான நிலநடுக்கம்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இன்று காலை லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவில் 4.4- ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காலை 7.48 மணிக்கு உணரப்பட்டது.

மணிப்பூரின் உக்ருல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில வாரங்களாகவே அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.