மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பெண்ணொருவர் பலி

அங்கும்புற – ரம்புகேவெல பகுதியில் நேற்று(26) பெய்த கடும் மழையினால், வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்றவேளை குறித்த வீட்டுக்குள் கணவன், மனைவி மற்றும் மகள் ஆகியோரே இருந்துள்ளனர்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் 56 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதுடன் அவரது கணவரும், மகளும் சிகிச்சைப்பெற்று வருவதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Comments are closed.