மதுபானசாலைகளுக்கு மறுஅறிவித்தல் வரை பூட்டு

இன்று (09) மாலை 5 மணி முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவு நாளை (10) மீண்டும் திறக்கும் நேரம் அறிவிக்கும் வரை மட்டும் அமலில் இருக்கும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று மாலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபானங்களை சில்லறை விற்பனை செய்ய உரிமம் பெற்ற அனைத்து மதுபான சாலைகளும் மூடப்பட வேண்டும்.

Comments are closed.