மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது!

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் 50 கால் போத்தல் மதுபானத்துடன் ஒருவரும்,  அனுமதிபத்திரத்தை மீறி உழவு இயந்திரத்தில்  மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் உட்பட இருவரை இன்று  (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிசாந்த அப்புகாமி  தெரிவித்தார்.

விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து  சம்பவதினமான இன்று அதிகாலை மட்டக்களப்பு நகரில் இருந்து வவுணதீவு பிரதேசத்திற்கு மோட்டர் சைக்கிள் ஒன்றில் 50 கால் போத்தல் மதுபானங்களை வியாபாரத்துக்காக எடுத்துச் சென்ற வியாபாரி ஒருவரை  வவுணதீவு வலையிறவு பாலத்தில் வைத்து கைது செய்ததுடன் மதுபானங்கள் மோட்டர்சைக்கிள் ஒன்றையும் பொலிசார் மீட்டனர்.

இதேவேளை வாழைக்காடு பிரதேச ஆற்றில் அனுமதிப்பத்திரத்தை மீறி உழவு இயந்திரத்தில் மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்ததுடன் உழவு இயந்திரமும்  மீடகப்பட்டுள்ளது.

இவ் இரு வேவ்வேறு சம்பவங்களில் கைது செய்தவர்களை  நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Comments are closed.