மதுபோதையில் வந்தவர்களால் ஆசிரியருக்கு நேர்ந்த கதி

வவுனியா – மன்னார் பிரதான வீதியில் மதுபோதையில் ரௌடிகுழுவொன்று வீதியால் சென்றவர்களை வழிமறித்து தாக்குதல் நடத்தியதில் ஆசிரியர் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக நேற்று இரவு 9 மணிக்கு பின்னர் சுமார் ஒரு மணிநேரமாக ரௌடிகள் அவ் வீதியால் பயணிப்பவர்களை வழிமறித்து தாக்குதல் மேற்கொண்டனர். அத்துடன் அவர்களது தகாத வார்த்தைப் பிரயோகங்களால் அருகில் உள்ள வீடுகளில் வசித்தோர் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இதன்போது அப்பாதையூடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரி ஆசிரியர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.