மதுபோதையில் வாகனம் செலுத்திய 82 பேர் கைது!

மதுபோதையில் வாகனம் செலுத்தும் நபர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 82 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, கடந்த 20ஆம் திகதி முதல் தற்போதுவரை 1398 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி 05ஆம் திகதிவரை இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்தக் காலப்பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்துகளில் 50 பேர் உயிரிழந்துள்ளதுடன், 132 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அத்துடன், 291 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Comments are closed.