மத்திய மாகாணத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

மத்திய மாகாணத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1740 ஆக அதிகரித்துள்ளதாக, மத்திய மாகாண சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்திலேயே அதிகளவு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.  இதற்கமைய, கண்டி மாவட்டத்தில் இதுவரை 1076 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் நுவரெலியா மாவட்டத்தில் 538 தொற்றாளர்களும் மாத்தளை மாவட்டத்தில் 126 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Comments are closed.