மனைவியின் கழுத்தை அறுத்த கணவன் தற்கொலை

குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு கணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

உயிரிழந்தவர் பரசங்கஸ்வெவ – பானியன்தடவல, சியபலேவ பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

21 வயதுடைய மனைவியுடன் நீண்டகாலமாக இருந்த குடும்பத் தகராறு காரணமாக கணவன் நேற்று (11) காலை மனைவியின் கழுத்தை அறுத்து படுகாயமடையச் செய்துள்ளார்.

பின்னர் அவர் தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த பெண் தற்போது அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், பரசங்கஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.