மன்னார் நகரசபை தலைவருக்கு நீதிமன்றம் தடை
மன்னார் நகர பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு செந்தமான இடத்தில் தனியார் விருந்தினர் விடுதி ஒன்றின் விளம்பர பலகை உரிய அனுமதிகளை பெற்று வைக்கப்பட்டது.
அந்த விளம்பர பலகையை அகற்ற மன்னார் நகர சபை தலைவர் முயற்சி மேற்கொண்ட நிலையில் , அவரின் செயற்பாட்டுக்கு மன்னார் மேல் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மன்னார் நகரசபை தலைவரின் வதிவிடத்திற்கு அருகில் உள்ள குறித்த தனியார் விருந்தினர் விடுதியின் விளம்பர பலகையை அகற்று நடவடிக்கையில் ஈடுபட்டார். இதனையடுத்து தனியார் விருந்தினர் விடுதியின் உரிமையாளரால் குறித்த செயற்பாட்டுக்கு எதிராக மன்னார் மேல் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ருந்தது.
குறித்த வழக்கை விசாரித்த மன்னார் மேல் நீதி மன்ற நீதிபதி குறித்த விளம்பர பலகை தொடர்சியாக கட்சிப்படுத்த அனுமதி வழங்கியுள்ளார். அதோடு தனிப்பட்ட பகை காரணமாகவே மன்னார் நகரசபை தவிசாளர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக , தனியார் விடுதி உரிமையாளர் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.