மரத்திலிருந்து வீழ்ந்து பாடசாலை மாணவன் பலி

மஸ்கெலியா – பிரவுன்லோ வனப்பகுதிக்கு விறகு சேகரிக்க சென்ற சிறுவன் ஒருவன் மரத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்தார்.

தமது சகோதரருடன் குறித்த சிறுவன் சென்றிருந்த நிலையில் இந்த அனர்த்தம் இன்று காலை நேர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் மஸ்கெலியா பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி பயிலும், பாடசாலை மாணவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Comments are closed.