மலர்ந்துள்ள புத்தாண்டில் நாடாளுமன்ற அமர்வுகள் இன்று ஆரம்பம்…

மலர்ந்துள்ள புத்தாண்டில் நாடாளுமன்ற அமர்வுகள் இன்று(05) ஆரம்பமாகவுள்ளது.

இதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் சுகாதார ஒழுங்குவிதிகளுக்கு அமைய இன்றைய அமர்வு இடம்பெறவுள்ளது.

சுகாதார வழிகாட்டல்களின் கீழ் ஊடகவியலாளர்கள் நாடாளுமன்ற அமர்வுகளை அறிக்கையிடுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய ஜனவரி 08 ஆம் திகதி வரை சபை அமர்வுகள் இடம்பெறும்.

Comments are closed.