மழையுடனான வானிலை தொடரும்

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழைப் பெய்யக் கூடும்.

குறித்த பகுதிகளின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும்.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பாதிவாகக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தொட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என வளிமண்டலவியல் எதிர்வு கூறியுள்ளது.

Comments are closed.