மழையுடனான வானிலை நிலவக்கூடும்

நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழைப் பெய்யக் கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்று அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் மிக அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments are closed.