மழையுடனான வானிலை

நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, மேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பிரதேசங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனைய இடங்களில் சீரான வானிலை நிலவும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசும் என்பதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Comments are closed.