மஹர சிறைச்சாலை அறிக்கை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற அமைதியின்மை சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை விரைவில் செயற்படுத்துவதற்கு  எதிர்ப்பார்த்துள்ளதாக   நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மஹரசிறைச்சாலையில் கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பதற்காக நீதி அமைச்சரினால் ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன தலைமையில்  குழுவொன்று  நியமிக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த குழுவின் இடைக்கால அறிக்கை  கடந்த  மாதம் 7 ஆம் திகதி  நீதி அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டதுடன் இறுதி அறிக்கை 30 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை சம்பவத்தில் கைதிகள் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவர்களில்  8 பேரின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு  தகனம் செய்யப்பட்டுள்ளது.

மேலும்  மூன்று சடலங்கள்  மீதான பிரேத பரிசோதனை  மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.