மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்..!

மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் ஒரு வாரத்திற்குள் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதிகளின் உறவினர்கள், நியாயமான விசாரணைக்கான கோரிக்கை முன்வைத்து ஊடக சந்திப்பொன்றை நடத்தி இருநதனர்.

இது தொடர்பில் எமது செய்திச் சேவை வினவியபோது காவல்துறை பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகுள்ளும், அதற்கு வெளியிலும் 150 இற்கும் அதிகமானோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

இதேநேரம், உயிரிழந்த மேலும் 3 கைதிகளின் பிரேத பரிசோதனைகளை எதிர்வரும் சில தினங்களுக்குள் நிறைவு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த மாதம் 29ஆம் திகதி மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 11 கைதிகள் உயிரிழந்த நிலையில், 8 கைதிகளின் பிரேத பரிசோதனைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

துப்பாக்கி பிரயோகத்தினால் அவர்கள் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

Comments are closed.