மாடல் அழகியை ஓட்டலில் அடைத்து 3 நாளாக பாலியல் பலாத்காரம்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 27 வயது பெண் மாடல் அழகியாக இருந்து வருகிறார்.அவரிடம் கொச்சியை சேர்ந்த சலீம் குமார் (வயது 33), அஜ்மல் மற்றும் சமீர் ஆகிய 3 பேர் தொடர்பு கொண்டு அவரை புகைப்படங்கள் (போட்டோஷூட்) எடுக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

இதற்காக கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு வரும்படி மாடல் அழகிக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மாடல் அழகியும் இதனை நம்பி கடந்த மாதம் 28-ந்தேதி கொச்சிக்கு சென்றார். பின்னர் அவரை சலீம் குமார் உள்பட 3 பேரும் கடந்த 1-ந்தேதி நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து சென்றனர்.

அங்கு சென்றதும் அவர்கள் மாடல் அழகிக்கு போதைப்பொருள் கலந்த குளிர்பானத்தை குடிக்க குடித்தனர். இதை குடித்த மாடல் அழகி உடனடியாக சுயநினைவை இழந்தார்.

அதன் பின்னர் 3 பேரும் மாடல் அழகியை ஓட்டல் அறையில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்தனர். இப்படி தொடர்ச்சியாக 3 நாட்கள் மாடல் அழகியை 3 பேரும் பலாத்காரம் செய்தனர். இதற்கு ஓட்டலின் உரிமையாளரான கிறிஸ்டீனா என்பவரும் உடைந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் ஓட்டலில் இருந்து தப்பிய மாடல் அழகி தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து போலீசில் புகார் அளித்தார். டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் அவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சலீம் குமாரை கைது செய்தனர்.

அதே சமயம் அஜ்மல், சமீர் மற்றும் ஓட்டல் உரிமையாளர் கிறிஸ்டீனா ஆகிய 3 பேரும் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதனிடையே போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிக்க சென்றபோது அங்கு தான் தகாத முறையில் நடத்தப்பட்டதாக மாடல் அழகி குற்றம் சாட்டியுள்ளார்.கணவரை விட்டு பிரிந்து வாழும் அந்த பெண்ணுக்கு ஒரு குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.