மாணவர்களின் முடிவுகள் இரத்து செய்யப்படும் பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித கடும் எச்சரிக்கை!

தற்போது நடைபெற்றுவரும் க.பொ.த. சாதாரண தர பரீட்சை நாளையதினம் முடிவடையும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே பரீட்சை முடிந்ததும் அமைதியாக கலைந்து செல்லுமாறு பரீட்சைகள் திணைக்களம் மாணவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பரீட்சை மையத்திலோ அல்லது வளாகத்திலோ கலகத்தனமாக நடந்துகொண்டு ஏனைய மாணவர்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

இந்த சம்பவங்களில் தொடர்புடைய மாணவர்களின் முடிவுகள் இரத்து செய்யப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்தார்.

Comments are closed.