மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்ற பாடசாலை பயிற்றுவிப்பாளர் கைது!
பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஈஷிகேஸ் முறையில் கஞ்சா விற்றுவந்த மாத்தளையிலுள்ள பிரதான பாடசாலையின் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் ஒருவரை, மாத்தளை பொலிஸார், இன்று (27) பகல் கைது செய்துள்ளனர்.
மேற்படி நபர் மாணவர்கள் இருவருக்கு கஞ்சா விற்பதற்காக 10,000 ரூபாய் பணத்தை ஈஷிகேஷ் முறையில் பெற்றுக்கொண்டுள்ளதுடன் கஞ்சாவை மாணவர்களுக்கு விற்பனை செய்ய முயன்றபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது மேற்படி நபரிடமிருந்து 1,476 மில்லிகிராம் கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேற்படிப் பயிற்றுவிப்பாளர் மிக நீண்ட காலமாக மிகவும் சூட்சுமுமான முறையில் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.