மாணவர்கள் மீது குளவிக் கொட்டு

பொகவந்தலாவ பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் 17 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகினர்.

இப்பாடசாலை கட்டடத்திற்கு அருகில் உள்ள மரம் ஒன்றில் கட்டப்பட்டிருந்த குளவிக் கூடு கலைந்தமைக் காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 17 மாணவர்களும் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து குறித்த பாடசாலையின் மாணவர்களுக்கு இன்றைய தினம் விடுமுறை வழங்குமாறு ஹட்டன் வலய கல்வி பணிப்பாளர் ஆர்.ஏ.சத்தியேந்திரா பணிப்புரை விடுத்துள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.