மாணவி மரணம் ஆசிரியை கைது
குறித்த மாணவர்களை நீராட அழைத்துச்சென்ற ஆசிரியையே கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பலாங்கொடை, கல்தொட்ட படகொட பிரதேசத்தில் வளவை கங்கையில் நீராடிக் கொண்டிருந்த மாணவ மாணவிகளில் ஒரு மாணவி நிரீல் மூழ்கி நேற்று முன்தினம் (30) உயிரிழந்தார்.
குறித்த ஆசிரியை பாடசாலையின் அதிபரிடமோ அல்லது வலய கல்விப் பணிப்பாளரிடமோ எவ்வித அனுமதியினையும் பெறாமல் மாணவர்களை வளவை கங்கைக்கு நீராட அழைத்துச் சென்றுள்ளதாக, ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.