மாமல்லபுரத்தில் குவிந்த திரையுலகினர் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்

கேரளாவைச் சேர்ந்த நயன்தாரா, தமிழில் 2005-ல் ‘ஐயா’ படத்தில் நடிகர் சரத்குமார் ஜோடியாக அறிமுகமாகி 17 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக கொடிகட்டி பறக்கிறார். தமிழ்நாட்டின் லால்குடியை பூர்வீகமாகக் கொண்ட இயக்குனர் விக்‌னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நடித்தபோது அவருடன் நயன்தாராவுக்கு காதல் மலர்ந்தது.

இவர்கள் இருவரும் தொடர்ந்து 7 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களது திருமணம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. எப்போது இவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள் என்பது திரைப்பட ரசிகர்களின் பேசுபொருளாக அமைந்தது. இந்த நிலையில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர். கடந்த ஆண்டின் பிற்பகுதியில் கேரளாவில் நயன்தாரா-விக்னேஷ்சிவன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது.

கோலாகல திருமணம்

இந்த நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் கோலாகல திருமணம், மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது.

Comments are closed.