மாமியாரை தாக்கிய மருமகன்

மாமியாரை தாக்கிய மருமகனை பொலிஸார் கைது செய்தனர். திருகோணமலை, கோமரங்கடவல – அடம்பன் பகுதியைச் சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது: சிவில் பாதுகாப்பு அதிகாரி தனது மனைவி, குழந்தைகள் மற்றும் அத்தையுடன் ஒரே வீட்டில் வசிக்கிறார். மருமகன் குடிபோதையில் வந்து மனைவியை தாக்கிய போது மாமியார் ஓடி வந்து தடுக்க முயன்றார்.

இதனால் ஆத்திரமடைந்த மருமகன் தனது மாமியாரை கட்டையால் தாக்கியதில் பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருமகன் தாக்கியதில் மாமியார் மண்டை உடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மருமகனை பொலிஸார் கைது செய்தனர்.

Comments are closed.