மார்ச் மாத இறுதியில் 2020ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் முடிவுகள்
2020ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் முடிவுகள், 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் இறுதிப் பகுதியில் அல்லது ஏப்ரல் மாத ஆரம்பத்தில் வெளியிடப்படும் என, கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தப் பெறுபேறுகள் வெளியான பின்னர், மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதி, குறுகிய காலத்துக்குள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, 2021ஆம் ஆண்டுக்கான உயர்தர வகுப்புகளை, எதிர்வரும் ஜூலை மாதத்தில் ஆரம்பிப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், கடந்த வருடம் டிசெம்பர் மாதம் நடைபெறவிருந்த கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்த வருடம் மார்ச் மாதம் நடைபெற்றது என்றும் மாணவர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வகைியல், பெறுபேறுகள் விரைவாக வெளியிடப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.