மாளிகாவத்தையில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

மாளிகாவத்தை NHS குடியிருப்பு தொகுதியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமது குடியிருப்பு தொகுதி 3 மாதங்களுக்கு அண்மித்த வகையில் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, குறித்த பகுதி மக்கள் அண்மையில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், மாளிகாவத்தை NHS குடியிருப்பு தொகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக, நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மாளிகாவத்தை NHS குடியிருப்பு தொகுதியைச் சேர்ந்த 180 பேருக்கு நேற்றைய தினம் Rapid Antigen பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதன் மூலம், குறித்த ஐவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.