மாவனெல்லை இம்புல பகுதியில் புத்தர் சிலையொன்றை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது!

மாவனெல்லை இம்புல பகுதியில் புத்தர் சிலையொன்றை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேகலை – ஹெட்டிமுல்ல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே மாவனெல்லை பொலிஸாரினால்  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் முன்னதாக வணக்கஸ்தலம் ஒன்றின் உண்டியலை உடைத்து திருடியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், புத்தர் சிலைக்கு அருகில் இருந்து 60 ரூபாவினை  குறித்த நபர் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் விசாரணைகள்  மூலம் தெரியவந்துள்ளது.

மாவனெல்ல இம்புல பகுதியில் கடந்த டிசெம்பர் மாதம் 28 ஆம் திகதி இரவு  அடையாளம் தெரியாத நபர்களினால் குறித்த   புத்தர் சிலை   சேதமாக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது. 

Comments are closed.