மின்சாரம் தாக்கி தந்தை பலி

யாழ்ப்பாணம்  – கரவெட்டி வடக்கு பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலியாகியுள்ளதாக நெல்லியடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று(05) இடம்பெற்ற இச்சம்பவத்தில், துன்னாலை ஆண்டாள் வளவு பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Comments are closed.