மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் பலி

லுணுகலை, அலகொலகல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதற்கமைய, குறித்த சிறுவன் நேற்று (06) மாலை வீட்டில் இருந்த திசைவிக்கு மின்சாரம் பெற்றுக் கொள்ள முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்த 16 வயது சிறுவனின் சடலம் லுணுகலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் லுணுகலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.