மின்சார நெருக்கடி உடனடியாக தீர்க்கப்படும் ,ஜனாதிபதி

நாட்டில் நிலவும் மின்சார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான, அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும், பொதுமக்களுக்கும் உறுதியளித்துள்ளார்.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, உடன் அமுலாகும் வகையில், மின்சார உற்பத்திக்கு அவசியமான எரிபொருளைக் கொள்வனவு செய்வதை, திறைசேரியும், மத்திய வங்கியும் உறுதிப்படுத்தும் என்றும் ஜனாதிபதி கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.