மின் துண்டிப்பு தொடர்பில் மின்சார சபையின் அறிவிப்பு

போதியளவு உலை எண்ணெய்யும், டீசலும் கிடைக்கப்பெறுமாயின், நாட்டின் எந்தவொரு பாகத்திலும் இன்று மின் துண்டிப்பு அமுலாகாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சார சபைக்கு போதுமான எண்ணெய்யைப் பெற்றுக்கொள்வதற்காக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமணி எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

இதன்படி, பெரும்பாலும் இன்றைய தினத்திற்குள் அவசியமான எண்ணெய் மின்சார சபைக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.