மின் துண்டிப்பை அமுலாக்கும் நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பமானது

நேற்று முதல் வலய ரீதியாக மின் துண்டிப்பை அமுலாக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, மாலை 5.30 தொடக்கம் இரவு 9.30 வரையான காலப்பகுதியில், சுமார் ஒரு மணிநேரத்திற்கு மின் துண்டிப்பு இடம்பெறுவதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

வலய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்படக் கூடிய காலம் மற்றும் இடங்கள் தொடர்பான விபரங்களை மின்சார சபை நேற்று முன்தினம் வெளியிட்டது.

எவ்வாறிருப்பினும், நேற்றைய தினம் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சு நேற்று மதியம் அறிவித்திருந்தது.

எனினும், தேசிய மின் கட்டமைப்புக்கு மின்சாரத்தை விநியோகிக்கும் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகிலுள்ள தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக சில பாகங்களில் மின்துண்டிப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.

இந்த நிலையில், வலய ரீதியான மின் துண்டிப்பு அமுலாக்கம் நேற்று முதல் அமுலாகியுள்ளதாக மின்சக்தி அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

Comments are closed.