மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டங்கள்
மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நேற்று பெருந்திரளான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் போரட்டங்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் போராட்டம் மியன்மாரின் Yangon நகரில், Dagon பல்கலைக்கழகத்திற்கு முன்பாக நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமது சந்ததியினரை இராணுவத்தின் பாதிப்புக்கு உட்படுத்த இடமளிக்கப் போவதில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த தேர்தலின் போது பல்வேறு மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டு, மியன்மாரின் ஆளும் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி உட்பட அரசியல் தலைமைகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் மியன்மாரில் இராணுவத்தினர் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், இராணுவத்தின் இந்த செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சர்வதேச நாடுகள் மற்றும் பல்வேறு தரப்பினர் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.