மீண்டும் அதிகரித்த தினசரி கொரோனா

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை தொடர்ந்து வீழ்ச்சிப்பாதையில் செல்கிறது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,091- பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 13,878- பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 340- பேர் தொற்று பாதிப்புக்கு பலியாகியுள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,44,01,670 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3,38,00,925- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,62,189 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் தற்போது 1,38,556  பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது கடந்த 266 நாட்களில் இல்லாத அளவிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைவாகும்.

நாட்டில் நேற்று ஒருநாளில் மட்டும் 57,54,817  கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை 1,10,23,34,225 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

Comments are closed.