முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்ற தீர்மானம் தொடர்பில் மீளாய்வு

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று  தளர்த்தப்பட்ட சட்டத்தை, மீளாய்வுக்கு உட்படுத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றியபோது கருத்து தெரிவித்த அவர், 15 பேர் கொண்ட நிபுணர் குழுவினால், இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன்படி, கடந்த 19 ஆம் திகதி முதல் இந்தத் தீர்மானம் அமுலாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த தீர்மானம் தற்போதைய நிலைமையில் ஏற்புடையதல்ல என பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.

எனவே, இந்தத் தீர்மானத்தை மீளாய்வுக்கு உட்படுத்துமாறு நிபுணர் குழுவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Comments are closed.