முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கல்வி அமைச்சின் செயலாளர்

இம்முறை நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் 5 ஆம் தரத்துக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஆகியன பிற்போடப்படுவதற்கு இதுவரையிலும் எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

எனினும், பாடத்திட்டங்கள் முடிக்கப்படாமலிருந்தால் அது தொடர்பாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்ததன் பின்னர், பரீட்சைகளை குறித்த தினத்தில் நடத்துவதா அல்லது பிற்போடுவதா என்ற இறுதித் தீர்மானத்துக்கு வர முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் வெளியிட முடியும் என தெரிவித்த அமைச்சின் செயலாளர், அண்மையில் முடிவடைந்த க.பொ.த. சாதாரணத் தர பரீட்சை முடிவுகள் எதிர்வரும் ஜூன் மாதத்தில் வெளியாகும் எனவும் கூறினார்.

Comments are closed.