முச்சக்கர வண்டி திருட்டுடன் மூவர் கைது

மருதானை பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்றை திருடிய குற்றச்சாட்டில் 3 பேர் கொழும்பு மத்திய பிரிவு குற்ற விசாரணை பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 8 மின்கலங்கள், கையடக்கத் தொலைபேசி மற்றும் திருடப்பட்ட முச்சக்கரவண்டி என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்  பேலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 29, 30 மற்றும் 38 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.