முச்சக்கர வண்டி மோதியதில் நால்வர் பலி!

காலி – பூஸா – வெல்லபட தொடருந்து கடவையில் முச்சக்கரவண்டி ஒன்று தொடருந்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலியாகினர்.

விபத்தில் காயமடைந்த மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அத்துடன், காயமடைந்த மற்றைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பெலியத்தையில் இருந்து சென்ற ரஜரட்ட ரெஜினி தொடருந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பூஸா பகுதியை சேர்ந்த நால்வரே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.